ஆபத்தான «நாடு கடத்தல் சட்ட அமுலாக்க மசோதா» மீதான வாக்கெடுப்பிற்கு இல்லை என வாக்களியுங்கள்!

யேர்மனி, பிரெஞ்சு, இத்தாலி, அல்பானிய, குர்திஸ், போர்த்துக்கேய, ஸ்லோவேனிய, பொஸ்னிய, ஸ்பானிய, தமிழ், துருக்கிய மொழிபே­சும் சமூகங்களின் கட்சிகளும் அமைப்புகளும் மிகவும் தெளிவாக நாடுகடத்தல் சட்ட அமுலாக்க மசோதாவிற்கு எதிராகப் போராடுவதற்கு கைகோர்த்துள்ளனர். இப் பிரசுரத்தை அனைத்து மொழிகளிலும்சோசலிச ஐனநாயக கட்சியின் வெளிநாட்டவர் மற்றும் குடியேற்றவாசிகள் பிரிவிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

இரண்டு மில்லியன் மனிதர்களின் வதிவிட உரிமை மீதான ஆபத்து

இந் நாட்டு கடவுச் சீட்டின்றி சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாகத் தொழில் புரியும் இரண்டு மில்­லியன் மக்களிற்கு நாடு கடத்தல் சட்ட அமுலாக்கம் ஆபத்தானது. சிறிய குற்றச் செயல்கள் புரிபவரை எவ்வித விசாரணையுமின்றி பலவந்தமாக திருப்பி அனுப்ப இது வழிசெய்கிறது. இச் சட்ட மூலமானது இந் நாட்டில் நீண்ட காலமாக வாழும் மக்களின் இரண்டாம் தலைமுறையி­னருக்கும் உரித்தானதாகும். சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட நாடு கடத்தல் சட்டமானது நீண்ட காலம் இந் நாடுகளில் வசிப்பவர்களிற்கு ஒரு கடினப் போக்குடைய சட்டமாகும். இவ் ஆபத்திலிருந்து விடுபடுவதற்கே நாடு கடத்தல் சட்ட அமுலாக்க மசோதாவிற்கு இல்லை என வாக்களிக்க வேண்டும்.

ஏமாற்று நடவடிக்கை

நாடு கடத்தல்; சட்ட அமுலாக்க மசோதா நீண்ட­காலத்திற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட நாடு கடத்தல் சட்டமூலத்தினை கடுமைப்படுத்துகிற பெயர்மாற்றப்பட்ட ஏமாற்று நடவடிக்கை. வெளி­நாட்டவரை திருப்பி அனுப்பும் இம் மசோதா அன்று குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் வெற்றி­பெற்றது. நாடு கடத்தல்; சட்ட அமுலாக்க மசோதாவின் மூலம் தம்மால் ஏற்கனவே கொண்டு­வரப்பட்ட மசோதாவை மீள ஒரு படி மேல் சென்று இன்னும் கடுமைப்படுத்தும் சட்டமாக அமுலாக்க முயற்சிக்கின்றனர்.

ஆபத்தான சட்ட மூலம்

நாடு கடத்தல் சட்ட அமுலாக்க மசோதா சுவிற்­சர்லாந்து அடிப்படை அரசியல் அமைப்பு முறை­க்கும், சர்வதேச மனித உரிமை ஒப்பந்தத்திற்கும் தனிமனிதர்களது சுயாதீன நடமாட்ட ஒப்பந்தத்திற்கும் எதிரானது. இம் மசோதாவுக்கான வரைவும் சட்ட அமுலாக்கமும் சட்டம் இயற்றுபவர்களிற்கும் நீதிமன்றத்திற்குமே உரித்தானதாகும் இதுவிடயத்தில் இவர்கள் சட்டத்தை தமது கைகளில் எடுத்துக் கொள்கின்றனர். இந் நடவடிக்கையானது அடிப்படையில் அரசியல் அதிகாரப் பகிர்வினை இரட்டிப்பாகப் பாதிக்கிறது. அத்தோடு இம் மசோதா சுவிற்சர்லாந்து அரசியலமைப்பு முறைமையினையும் பல சட்ட ஒழுங்குகளையும் பாதிக்கிறது

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு பாதிப்படையும்

சுவிற்சர்லாந்து சமஷ்டி அரசின் கருத்துப்படி, இம் மசோதாவை ஏற்றுக்கொண்டால் வருடத்திற்கு 10000 பேர்கள் சிறிய குற்றங்களிற்காக எவ்வித விசாரணையுமின்றி திருப்பி அனுப்பப்படு­வதற்கான சாத்தியம் உண்டு. இதன்மூலம் சுவிற்சர்லாந்து அரசு பத்தாயிரம் தடவைகள் தனிமனிதர்களது சுயாதீன நடமாட்ட ஒப்பந்தத்தினை மீறும். மேலும் இந் நடவடிக்கையானது அரசியல் அமைப்பினால் தீர்மானிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் உடனான உறவை பாதிக்கப் போகிறது.

குடியேற்றவாசிகள் தீர்மானகரமான சக்திகள்

கடந்த ஆண்டுகளில் சுவிற்சர்லாந்தில் ஒரு மில்லியன் மக்கள் இந் நாட்டுப் பிரஜைகளாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் 880000 பேர் பதினைந்து வயதிற்கு மேற்­பட்ட சுவிற்சர்லாந்து பிரஜைகள், அத்துடன் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள். சுவிற்சர்லாந்து குடியேற்ற வாசிகள் நடைபெறப்போகும் அபிப்பிராய வாக்கெடுப்பில் வாக்குகளை சரியான முறையில் பிரயோகித்து இம் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தால் எமது பெரும்பான்மை பலத்தினை நிரூபிக்க முடியும். நாம் அளிக்கும் இல்லை எனும் அபிப்பிராயத்தின் மூலம் இம் மனிதாபிமானமற்ற நாடு கடத்தல் சட்ட அமுலாக்க மசோதாவை நிராகரிக்க முடியும்

உங்களது ஒத்துழைப்பு எமக்கு அவசியமானது

சோசலிச ஜனநாயகக் கட்சி அனைத்து வெளிநாட்டு மற்றும் குடியேற்ற வாசிகளின் அரசியல் பொருளாதார சமூக கலாச்சார விழுமியங்களிற்கு இடையே சமத்துவப் போக்கினை கடைப்பிடிக்கும் கட்சியாகும். நாம் வெளிநாட்டு மற்றும் குடியேற்ற வாசிகள் அனைத்துத் தரப்பினரதும் அரசியல் சமத்துவ ஈடுபாட்டிற்கும் அதேபோல் பாரபட்சத்துக்கு எதிராகவும் அவர்களினது அரசியல் கட்சிகளுடனும் சமூக அமைப்புகளுடனும் இணைந்து போராடுவோம். இந்த மசோதாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு உங்கள் ஆதரவினையும் நன்கொடைகளையும் சோசலிச ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டு மற்றும் குடியேற்ற பிரிவுக்கு வழங்குங்கள். தொடர்புகளிற்கு:

www.spschweiz.ch/migranten

www.pssuisse.ch/migrants

யேர்மன், மொழியில் நிதி பங்களிப்பு தொடர்பு விபரங்கள்:

– SP Schweiz, 3001 Bern, PC 30-28039-3, IBAN CH45 0900 0000 3002 8039 3, Vermerk «SP MigrantInnen, Kampagne Durchsetzungsinitiative»

– PS Suisse, 3001 Berne, PC 30-28039-3, IBAN CH45 0900 0000 3002 8039 3, avec la mention «PS Migrant-e-s, campagne mise en œuvre»

Animation laden...Animation laden...Animation laden...

Newsfeed